

மின்சார உபயோக பொருட்களை தயாரிக்கும் ஹெவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு களை பிரிப்பதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அதாவது ஐந்து ரூபாய் முகமதிப்பு இருக்கும் பங்குகளை ஒரு ரூபாய் முகமதிப்பு இருக்கும் பங்குகளாக மாற்றுவதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இருந்தாலும், இந்த பங்கு பிரிப்புக்கு பங்குதாரர்களின் ஒப்புதல் அவசியம் என்று ஹெவல்ஸ் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்விட்ச், மின் விசிறி, மோட்டார், வயர், பல்பு, சி,எஃப்.எல். என பல மின் பொருட்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 14 உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனத்தின் மின் பொருட்கள் விற்பனையா கின்றன. வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு குறைந்து (0.13%) 1,172.50 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.