சென்செக்ஸ் 311 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 311 புள்ளிகள் வீழ்ச்சி
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 311 புள்ளிகள் (0.50 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,692 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 100 புள்ளிகள் (0.56 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,845 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 110.83 புள்ளிகள் உயர்வடைந்து 61,113.40 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.35 புள்ளிகள் உயர்வடைந்து 17,965.55 ஆக இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயர்வை நீட்டித்து வைத்திருக்கும் என்ற தகவல் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்ச உணர்வை நீட்டித்தது. அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி, வர்த்தகத்தின் பின்பாதியில், நிதி மற்றும் வங்கிப்பங்குகளின் கடுமையான சரிவு போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 311.03 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 60, 691.54 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,844.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, விப்ரோ, டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வடைந்திருந்தன. மறுபுறம் எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in