பிப்.20, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

பிப்.20, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று திங்கள்கிழமை (பிப்.20) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்து இறங்கிவந்த தங்கம் விலை சனிக்கிழமை உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.5,280-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.42,280-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,136 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.71,700-ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in