ஹட்கோ முதல் நாள் வர்த்தகத்தில் 21% உயர்வு புதுடெல்லி

ஹட்கோ முதல் நாள் வர்த்தகத்தில் 21% உயர்வு புதுடெல்லி
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான ஹட்கோ முதல் நாள் பங்கு வர்த்தகம் நேற்று தொடங்கியது. முதல் நாள் வர்த்தகத்தில் இந்த பங்கு 21 சதவீதம் உயர்ந்து முடிந் தது. 60 ரூபாய்க்கு இந்த நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. நேற்று அதிகபட்சமாக 77.80 ரூபாய் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் 21 சதவீதம் உயர்ந்து 72.55 ரூபாயில் முடிவடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,479 கோடியாக இருக்கிறது. ஏப்ரல் 2012-ம் ஆண்டுக்கு பிறகு பொதுத்துறை நிறுவனம் பட்டியலிடப்படுவது இப்போதுதான்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in