Published : 11 Jul 2014 09:00 AM
Last Updated : 11 Jul 2014 09:00 AM

வளர்ச்சிக்கான பட்ஜெட்: தொழில்துறையினர் கருத்து

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை இந்திய தொழில் துறை வரவேற்றிருக்கிறது. இது வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும். இந்த பட்ஜெட் முதலீடுகளை அதிகரித்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி இருப்பதால் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் (சி.ஐ.ஐ.) அஜய் ஸ்ரீராம் தெரிவித்தார். மேலும் முதலீட்டாளர் களை ஊக்குவித்து, அதற்கான வர்த்தக சூழ்நிலையை உருவாக்கி, வளர்ச்சியை அதிகரிக்க திட்டமிட் டுள்ளார்.

திட்டம் தெளிவாக இருக் கிறது என்றார். இந்தியா போன்ற நாட்டுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்குவது அவசியம் என்றார்.

பாதுகாப்பு, இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை கொண்டுவந்தது, தொழில் மையங்களை அமைத்து, தொழில்முனைவை ஊக்குவித்தது போன்றவை உற்பத்தி துறையை ஊக்குவிப்பதாகும். இது மகிழ்ச்சிக்குரியது என்றார்.

எங்களுடைய முன்னுரிமை களில் வரி விதிப்பு முறையில் நிலை யான தன்மை தேவை என்பதுதான். முன் தேதியிட்டு எந்த வரிவிதிப்பும் இருக்காது என்று கூறியிருப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும் என்று பிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் இந்திய பொருளா தாரத்துக்கு நடுத்தர கால இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது. மேலும், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று சி.ஐ.ஐ.யின் இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டிருப்பதை செயல்படுத்தும் பட் சத்தில் ஜி.டி.பி வளர்ச்சி அதிகரித்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பானர்ஜீ தெரிவித்தார்.

தென் இந்திய வர்த்தக சபை (எஸ்ஐசிசிஐ) பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறது. 2016-17ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைப்போம் என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல கட்டுமானத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது, குறிப்பாக 100 புதிய நகரங்களை உருவாக்கும் திட்டத்தை தென் இந்திய வர்த்தக சபை வரவேற்பதாக அதன் தலைவர் ஜவகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

நீண்ட கால வளர்ச்சியை நோக்கி இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டி ருப்பதாக கெவின்கேர் நிறுவனத் தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார். மேலும் கார்ப்பரேட், சாதாரண குடிமக்கள், பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பு தேவையானத்தை இந்த பட்ஜெட் வழங்கி இருக்கிறது என்றார்.

செயல்படுத்துவது முக்கியம்: பிட்ச்

ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் சாதகமாக இருந்தாலும், திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பது முக்கியம் என்று சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான பிட்ச் எச்சரிக்கையாக கருத்து தெரிவித்திருக்கிறது.

வளர்ச்சியை 7 முதல் 8 சதவிதமாக அதிகரிப்பது, நிதிப்பற்றாக்குறையை குறைப்பது போன்றவை சாதகமான விஷ யங்கள் என்றாலும் செயல் படுத்துவது முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x