

மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்று ராய்ட்டர்ஸ் நடத் திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டின்படி, இந்திய பொருளாதாரம் மிக வேக மாக வளர்ந்து வருகிறது எனவும் உற்பத்தி மற்றும் சேவைத்துறை களின் செயல்பாடுகள் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந் திர மோடி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இதனால் குறுகிய காலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு தனியார் மற்றும் பொது நுகர்வு மீண்டு வந்துள்ளது. ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் 35 பொருளாதார நிபுணர்கள், இந்திய பொருளாதாரம் நடப்பு காலாண்டில் 7.1 சதவீத வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.0 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது.
``கடந்த நவம்பர் மாதம் அறிவிக் கப்பட்ட பணமதிப்பு நீக்கத்தால் கடந்த நிதியாண்டில் இரண்டாவது பாதியில் பொருளாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டது. அனைத்து குறியீடுகளும் சரிவைக் கண்டன. ஆனால் அதன்பிறகு விரைவாக பொருளாதாரம் மீண்டு வந்துள்ளது’’ என்று ஹெச்டிஎப்சி வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துஷார் அரோரா தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியா வின் தொழில்துறை உற்பத்தி 2.7 சதவீதம் உயர்ந்துள்ளது. பேக்டரி மற்றும் சேவைகள் செயல்பாடு கள், கடந்த மார்ச் மாதத்தில் ஐந்து மாதங்களில் அல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பு குறுகிய காலத்துக்கு மட்டும் இருந்தது என அறியலாம்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒரே வரியாக இருப்பதால் இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாகும். ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
``ஜிஎஸ்டி அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால் ஜூலை மாதமே இது உயர வாய்ப்பில்லை. இந்த நிதியாண்டின் இறுதியில் ஜிஎஸ்டியின் பலன் தெரியவரும்’’ என்று சம்ரா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளா தார நிபுணர் கரண் மெஹ்ரிஷி தெரிவித்தார்.