பிப்.16, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வியாழக்கிழமை (பிப்.16) சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்திருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ரூ.5,280-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,136-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.71,800-ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in