

வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வீடியோகான் டிடீஹெச் நிறுவனத்தை, ஜீ குழுமத்தைச் சேர்ந்த டிஷ் டிவி உடன் இணைப்பதற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் (சிசிஐ) வழங்கி இருக்கிறது.
இந்த இணைப்புக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம்(செபி), பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றின் அனுமதி ஏற்கெனவே கிடைத்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் இந்த ஒரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் இந்த இணைப் புக்கு ஒப்புதல் வழங்கியது. இணைப்புக்குப் பிறகு டிஷ்டிவி வீடியோகான் என்னும் பெயரில் புதிய நிறுவனம் செயல்படும்.
டிஷ் டிவிக்கு 1.55 கோடி வாடிக்கையாளர்களும், வீடியோகானுக்கு 1.22 கோடி வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர். இந்தியாவில் மொத்த டிடீஹெச் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 6.2 கோடியாகும்.