சென்செக்ஸ் பட்டியலில் கோடக் மஹிந்திரா வங்கி

சென்செக்ஸ் பட்டியலில் கோடக் மஹிந்திரா வங்கி
Updated on
1 min read

கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் டிவிஆர் ஆகியவை பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஜூன் 19-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்செக்ஸ் பட்டியலில் இருந்து பொதுத்துறை நிறுவனமான கெயில் நீக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிஎஸ்இ 100, பிஎஸ்இ 200, சென்ஸ்செக்ஸ் நெக்ஸ்ட் 50 மற்றும் துறைவாரியான குறியீடுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஐடிஎப்சி வங்கி, ஏபிபி இந்தியா, செயில் மற்றும் கனரா வங்கி ஆகியவை சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் ஆயில் இந்தியா, ஆரக் கிள் பைனான்ஷியல் சர்வீசஸ், பஜாஜ் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த பட்டியலி லிருந்து நீக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பின்சர்வ், பெட்ரோ நெட் எல்என்ஜி, பிரமால் எண்டர் பிரைசஸ்,  சிமெண்ட், எம்ஆர்எப் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்இ 100 குறியீட்டில் இணைக்கப் பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in