Last Updated : 18 May, 2017 10:16 AM

 

Published : 18 May 2017 10:16 AM
Last Updated : 18 May 2017 10:16 AM

சர்வதேச அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவோர் பட்டியல்: ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதலிடம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி (60), சர்வதேச அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். குளோபல் கேம் சேஞ்சர்ஸ் எனும் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் உலகில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோர் குறித்த கணக்கீடு நடத்தப்பட்டது. இப்பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது ஆண்டாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது. இதில் தொழில் ரீதியாக மாற்றங்களை உருவாக்கும் நிறுவனத் தலைவர்கள் பலரும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். தொழிலில் மாற்றங் கள் செய்ததன் மூலம் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வா தாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங் களை ஏற்படுத்தியவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் பெருமளவு மக்களிடம் இன்டர்நெட்டை கொண்டு சென்றதில் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எண்ணெய், எரிவாயு துறையில் முன்னணியில் விளங்கிய முகேஷ், தொலைத் தொடர்புத் துறையில் நுழைந்து இணையதள வசதியை மிகக் குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துள்ளார். இதன் மூலம் 10 கோடி வாடிக்கையாளர்களை 6 மாதத்தில் பெற்றுள்ளார். இவரது ரிலையன்ஸ் ஜியோ, அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கத்துக்கு வழியேற்படுத்தித் தந்துள்ளது. மின்னணுமயமாக்குதலில் இந் தியா பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக இவர் மேற்கொண்ட மாற்றம் மிகப் பெரும்பாலான வர்களைச் சென்றடைந்துள்ளது என்றும் ஃபோர்ப்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

அன்றாட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், உடல் நலம் மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவினர் களுக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு டிஜிட்டல் மாற்றம் மிகவும் உதவியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள் ளது. பொதுவாக பெரும்பாலான நிறுவன தலைவர்கள் சாதனை அளவான லாபத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்களை விடுத்து உண்மையிலேயே சமுதாய மாற்றத்துக்கு தங்களின் தொழில் மூலம் பங்களிப்பை ஏற்படுத்தி யவர்களைக் கண்டறிந்து பட்டி யலிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வீட்டு உபயோகப் பொருள் தயாரிக் கும் டைசன் நிறுவனத்தின் நிறுவனர் ஜேம்ஸ் டைசனும் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் முதலீட்டு நிர்வாக நிறுவனம் பிளாக் ராக் இணை நிறுவனர் லாலி ஃபிங்க், சவூதி அரேபியா வின் இளவரசர் அராபியா முகமது பின் சல்மான், சமூக ஊடக நிறுவனத்தின் ஸ்நாப் நிறுவனர் இவான் ஸ்பீகல், சீன நிறுவனமான டிடி சுக்ஸிங் நிறுவ னர் ஷெங் வெய், ஆப்பிரிக்க சில்லரை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனத்தின் நிறுவனர் கிறிஸ்டோ வெய்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாப் குளோபல் கேம் சேஞ்சர்ஸ்

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,

இந்தியா

ஜிவ் அவிரம், அமோன் ஷாஷூவா

மொபிலிக், இஸ்ரேல்

ஸ்டூவர்ட் பட்டர்பீல்ட்

ஸ்லாக், அமெரிக்கா

ஜான் பாட்ரிக் கொலிசன்

ஸ்டிரைப், அமெரிக்கா

ஜேம்ஸ் டைசன்

டைசன், இங்கிலாந்து

லாரி ஃபிங்க்

பிளாக் ராக், அமெரிக்கா

டாவெட் ஹினிகுஸ், கிறிஸ்டைன் கார்மான்

டிரான்ஸ்பர்வைஸ், இங்கிலாந்து

கென் பிரேஸர்

மெர்க், அமெரிக்கா

ராபர்ட் காட்ஸ்

வாய்ல், அமெரிக்கா

ஸ்காட் பர்குவார், மைக் கேனோன் புரூக்ஸ்

அட்லாசியன், ஆஸ்திரேலியா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x