Published : 19 May 2017 10:18 AM
Last Updated : 19 May 2017 10:18 AM

ஹெச்1பி விசா புதிய விதிமுறைகளால் ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு பாதிப்பில்லை

ஹெச்1பி விசா நடைமுறைகளால் ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் சென்னையில் தெரிவித்தார். பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக ‘டெக் பீ’ என்கிற வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை ஹெச்சிஎல் அறிவித்துள்ளது. ஓர் ஆண்டு பயிற்சிக்கு பின்னர் வேலை வாய்ப்பும், தகுதிவாய்ந்த மாண வர்களுக்கு ஷிவ்நடார் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்கான வாய்ப்புகளும் உருவாக்கித் தர உள்ளது.

இது தொடர்பாக பேசிய ஸ்ரீமதி , கிராமப்புற மாணவர்கள் இளம்வயதிலேயே ஐடி துறை பணிகளுக்குச் செல்ல இந்த பயிற்சி உதவும். 60% செய்முறை பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவி தொகை மற்றும் தங்குமிட வசதிகளும் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் இந்த பயிற்சிகள் தொடங்க உள்ளன. இந்த ஆண்டில் 500 மாணவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்திய அரசு மேற்கொண்டுவரும் திறன் வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்க மாகவும் ஹெசிஎல் நிறுவனத்தின் இந்த முயற்சி இருக்கும் என்றார். ஐடி துறையில் நிலவும் தற்போதைய சூழல் வழக்கமான ஒன்றுதான் என்றும் குறிப்பிட்டார்.

பனிரெண்டாம் வகுப்பில் கணிதம், வணிக கணிதப் பிரிவில் 85 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். சென்னையில் இதற் கான நேர்காணல் இந்த மாதம் 20ம் தேதி முதல் ஜூன் மாதம் 20ம் தேதி வரை ஹெச்சிஎல் அலு வலகங்களில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 1800 274 2500 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x