ரூ.966 கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாத விவகாரம்: ஜூம் டெவலெப்பர் நிறுவனத்தின் இயக்குநர் விஜய் சவுத்ரி கைது

ரூ.966 கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாத விவகாரம்: ஜூம் டெவலெப்பர் நிறுவனத்தின் இயக்குநர் விஜய் சவுத்ரி கைது
Updated on
1 min read

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொடர்பு இருப் பது தெரிய வந்ததை அடுத்து ஜூம் டெவலெப்பர் நிறுவனத்தின் இயக்குநர் விஜய் சவுத்ரியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.966 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தற்கு விஜய் சவுத்திரிக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட் டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூம் டெவலெப்பர் இயக்குநர் விஜய் சவுத்ரி மீது சிபிஐ ஐந்து குற்ற பத்திரிகைகளை தாக்கல் செய்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மும்பை யில் கைது செய்யப்பட்ட சவுத்ரி அடுத்தடுத்த சட்ட நடவடிக்கை களுக்காக இந்தூருக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

மொத்தம் 25 வங்கிகளில் ரூ.2,650 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் முறைகேட்டில் ஜும் டெவலெப்பர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போது ரூ.966 கோடி கடனை திருப்பி செலுத் தாத வழக்கில் கைது செய்திருப்ப தாக அமலாக்கத் துறையினர் கூறியுள்ளனர். மேலும் கலிபோர்னி யாவில் ஜும் டெவலெப்பர் நிறு வனத்துக்குச் சொந்தமான 1,280 ஏக்கர் நிலம், மற்றும் பண மோசடி வழக்கில் தொடர்புடைய ரூ.130 கோடியையும் அமலாக்கத் துறை யினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விஜய் சவுத்ரி, பெவரின் ஸ்டைபங்க் பவுண்டேஷன் மற்றும் விண்ட்லீப் பவுண்டேஷன் என இரண்டு அறக்கட்டளை களை நிர்வகித்து வந்தார். இந்த அறக்கட்டளைகள் மூலம் இங்கிலாந்து மற்றும் சுவிட்சர் லாந்தில் ஐந்து நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதை அமலாக் கத்துறையினர் கண்டுபிடித்துள்ள னர். சவுத்ரியும் அவரது ஆடிட்டர் ஷரத் காப்ராவும் சேர்ந்து வங்கி களில் கடனை பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்துள்ள னர். மேலும் இந்த பணத்தை பயன் படுத்தி பல்வேறு நிறுவனங் கள் பெயரில் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித் துள்ளனர் என்பதும் விசாரணை யில் தெரியவந்துள்ளது.

``தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தன் பெயரிலும் கிட்டத்தட்ட 485 நிறுவனங்களை சவுத்ரி உருவாக்கியுள்ளார். பண மோசடி செய்யும் நோக்கில் அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், சீனா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நிறுவனங் களை உருவாக்கியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விஜய் சவுத்ரியின் ஆடிட்டர் காப்ரா மீதும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in