

புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தை தொடர்பான பண மோசடி வழக்கில் அதன் முன்னாள், தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) பதவியில் இருந்தபோது தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதன் அடிப்படையில் தகவல்களை முன்கூட்டியே கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக சித்ரா ராமகிருஷ்ணா, அவரது சகாக்களை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை யினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ராவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.