

போர் விமானங்கள், பீரங்கிகள், போர் கப்பல்கள் மற்றும் பாது காப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்கான உரிமத்தை மத்திய வர்த்தகத்துறை மற்றும் நிறுவனங்கள் அமைச்சகம் இனி வழங்க இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதற்கு உரிமம் வழங்கலாம் என்று மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாடு (டிஐபிபி) துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையெடுத்து பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதற்கான உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் டிஐபிபி வழங்க இருக்கிறது. நிறுவனங்களைப் பொருத்தே இந்த உரிமம் வழங்கப்படும்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பாதுகாப்பு துறையில் உற்பத்தி மேற்கொள் வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வந்தது. தற்போது தனியார் நிறுவனங்கள் மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாடு துறையிடம் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பீரங்கிகள், மற்ற ஆயுதம் தாங்கிய போர் வாகனங்கள், மிலிட்டரி வாகனங்கள், பாதுகாப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தானியங்கி விமானங்கள், போர் கப்பல்கள், ஆட்டோமோட்டிக் ஆயு தங்கள், பயாலஜிக்கல் ஆயுதங் கள் போன்றவை தயாரிக்க தற்போது மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாடு துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
6 வாரங்களில் அனுமதி
தேசிய பாதுகாப்பு அனுமதி கொள்கை என்பது பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 4 முதல் 6 வாரங்களில் பாதுகாப்பு அனுமதி வழங்குவதற்காக கொண்டுவரப் பட்டது. தற்போது வரை மத்திய உள்துறை அமைச்சகம் 3,300 முதலீட்டு விண்ணப்பங்களுக்கு பாதுகாப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
2015-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி பாதுகாப்பு அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கையின் படி, நிறு வனத்தின் நிறுவனர்கள், தலைவர் கள், இயக்குநர்கள் மீது எந்தவொரு கிரிமினல் பதிவுகள் இருக்கக் கூடாது. இந்த உறுதியினை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும்.