Last Updated : 24 May, 2017 10:30 AM

 

Published : 24 May 2017 10:30 AM
Last Updated : 24 May 2017 10:30 AM

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையால் மருத்துவ கருவிகள், ஸ்மார்ட்போன் விலை குறையும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையால் பல பொருள்களின் விலை குறையும். குறிப்பாக பேக் சிமென்ட், மருத்துவ கருவிகள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரு முனை வரி விதிப்பு முறையாக ஜிஎஸ்டி அமலாக உள்ளது. பேக் செய்யப்பட்ட சிமென்ட்டுக்கு தற்போது 12.5% உற்பத்தி வரி மற்றும் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ. 125 வரி மற்றும் மதிப்பு கூட்டு வரியாக 14.5% வரி விதிக்கப் படுகிறது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் சிமென்ட்டுக்கான வரி 29 சதவீத மாக உள்ளது. இத்துடன் ஆக்ட்ராய், விற்பனை வரி, நுழைவு வரி உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது இது 31 சதவீதமாகிறது. ஆனால் ஜிஎஸ்டி முறையில் சிமென்ட்டுக்கு 28% வரி விதிக்கப்படுகிறது. இத னால் சிமென்ட் விலை குறையும்.

இதேபோல ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மற்றும் உயிரி வேதி தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு தற்போது 6 சதவீதம் உற்பத்தி வரி மற்றும் 5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இது தவிர ஆக்ட், நுழைவு வரி ஆகியனவும் விதிக்கப்படுகிறது. இவற்றுடன் சேர்த்துப் பார்க்கும்போது 13 சதவீத வரி விதிப்புக்குள்ளாகிறது. ஆனால் இத்தகைய மருத்துவ தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி-யில் 12 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.

ஸ்மார்ட்போன்களுக்கு 2 சதவீதம் உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி மாநிலத்துக்கு தகுந்தவாறு 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 13.5% வரிவிதிப்புக்குள்ளாகிறது. ஆனால் ஜிஎஸ்டி-யில் 12 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

இதேபோல மருத்துவ உபகரணங்களுக்கு 6 சதவீத வரி மற்றும் உற்பத்தி வரி 5 சதவீதம், மதிப்பு கூட்டு விதிக்கப்படுகிறது. இத்துடன் நுழைவுவரி, உள்ளிட்ட வரிகளும் விதிக்கப்படுகின்றன. இவற்றுடன் கணக்கிட்டால் மொத்தம் 13% வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி-யில் 12 சதவீத வரி வரம்புக்குள் வருகிறது.

இதேபோல பூஜை பொருள் களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இவற்றில் எவற்றுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் விரைவில் வெளியாகும் என்றார் ஜேட்லி.

பொழுதுபோக்கு சேவை

பொழுதுபோக்கு சார்ந்த துறைக்கு ஜிஎஸ்டி-யில் குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்கும் துறையினர் உள்ளீட்டு வரிச் சலுகையையும் பெற முடியும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

தற்போதைய வரி விதிப்பு முறையில் பொழுதுபோக்கு சேவை அளிப்பவர்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ளீட்டு வரிச் சலுகையும் கிடையாது. ஆனால் ஜிஎஸ்டி முறையில் இவர்களுக்கு இச்சலுகை கிடைத்துள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x