ரூ.1 லட்சம் பரஸ்பர நிதி முதலீடு 21 வருடங்களில் 1 கோடி ரூபாயாக உயர்வு

ரூ.1 லட்சம் பரஸ்பர நிதி முதலீடு 21 வருடங்களில் 1 கோடி ரூபாயாக உயர்வு
Updated on
1 min read

ரிலையன்ஸ் கேபிடல் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ரிலையன்ஸ் குரோத் பண்ட் பிரிவில் ஓப்பன் எண்டட் ஈக்விட்டி திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) ரூ.1,000த்தை எட்டியிருக்கிறது. ``இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு இன்றைய நிலை யில் ரூ.1 கோடியாக இருக்கும்’’ என ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் சிஇஓ சுந்தீப் சிக்கா தெரிவித்துள்ளார். இதன் நீண்ட கால லாபத்திற்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு மிகச் சிறந்தது என நிரூபணம் ஆகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் குரோத் பண்ட் பிரிவில் ஓப்பன் எண்டட் ஈக்விட்டி திட்டத்தை 1995-ம் ஆண்டு ரிலையன்ஸ் கேபிடல் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 21 வருடங்களுக்குப் பிறகு இதன் நிகர சொத்து மதிப்பு ரூ. 1,000 ஆக உயர்ந்துள்ளது. மியூச்சுவல் பண்ட் துறையில் முதன் முதலாக ஒரு திட்டம் ரூ.1,000 என்கிற நிகர சொத்து மதிப்பை எட்டியிருக்கிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது இதன் நிகர சொத்து மதிப்பு ரூ. 10-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 21 வருடங்களில் 100 மடங்கு நிகர சொத்து மதிப்பு உயர்ந் திருக்கிறது.

குறிப்பிட்ட காலத்தில் மியூச் சுவல் பண்ட் திட்டத்தினுடைய ஒரு பங்கின் மதிப்பை நிகர சொத்து மதிப்பு என்று குறிப்பிடுவர். ரிலையன்ஸ் குரோத் பண்ட் மிட் கேப் வகையை சார்ந்தது. இந்த பண்டின் மொத்த மதிப்பு ரூ. 5,000 கோடி. கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் மேலான முதலீட்டாளர்கள் இந்த மியூச் சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in