Published : 08 Feb 2023 04:23 AM
Last Updated : 08 Feb 2023 04:23 AM

குமரியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி - கப்பல்களில் பயணிக்கும் ‘தென்னை ஈர்க்கு’

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 5 லட்சம் பேர் தென்னை மூலம் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

தேங்காய் மட்டுமின்றி இளநீர், தென்னை ஓலையில் கிடைக்கும் ஈர்க்கு, தேங்காய் சிரட்டை, எரிபொருளாக பயன்படும் தென்னை மட்டை ஆகியவை மூலமும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. தென்னை ஈர்க்கிற்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் அதிக தேவை இருக்கிறது.

அங்கு துடைப்பத்துக்கு மட்டுமின்றி, வீட்டு அறைகளில் இயற்கையான தோற்றம் மற்றும் தட்பவெப்பத்துக்காக தென்னை ஈர்க்குகளை சுவற்றில் பதிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் பல டன் ஈர்க்குகள் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இங்குள்ள கிராமங்களுக்கு நேரடியாக வந்து தென்னை ஈர்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய தட்பவெப்பத்தில் தென்னை ஓலைகள் விழுவது குறைவாக உள்ளதால், ஈர்க்கு விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தென்னை ஈர்க்கு ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரம் தேங்காய் கொள்முதல் விலை ரூ.23 என வீழ்ச்சி அடைந்துள்ளது.

சபரிமலை மற்றும் பொங்கல் சீஸனின்போது தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்த நிலையில், தற்போது விலை குறைந்திருப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. அதேநேரம் ஈர்க்கு விலை ஏற்றம் அடைந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x