ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் நாட்டின் பணவீக்கம் 2 சதவீதம் குறையும்: ஹஷ்முக் ஆதியா கருத்து

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் நாட்டின் பணவீக்கம் 2 சதவீதம் குறையும்: ஹஷ்முக் ஆதியா கருத்து
Updated on
1 min read

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதால் நாட்டின் பணவீக்கம் 2 சதவீதம் குறையும் என்று மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி மூலம் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

சுதந்திரம் அடைந்தபிறகு நாட் டின் வரி அமைப்பில் செய்யப்படும் மிகப் பெரிய சீர்த்திருத்தம் ஜிஎஸ்டி ஆகும். நுகர்வோர்களுக்கு ஜிஎஸ்டி அமைப்பை பற்றி தெரியப் படுத்துவதற்கு மத்திய அரசு பல் வேறு திட்டங்களை கொண்டுவர இருக்கிறது. இதனால் புதிய வரி அமைப்பின் மூலம் வர்த்தகர்கள் நுகர்வோர்களை ஏமாற்றுவது தடுக் கப்படும்.ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த வாரத்தில் தங்கம், பீடி, பிஸ்கட் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை இறுதி செய்யும்.

ஜிஎஸ்டியால் பணவீக்கம் அதி கரிக்கும் என்று நான் நினைக்க வில்லை. பணவீக்கம் உயராத வகையில் சில சிறப்பு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். எங்களது கணிப்பின் படி, அனைத்து பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் இறுதி செய்தவுடன் நாட்டின் பணவீக்கம் 2 சதவீதம் குறையும். மேலும் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம்பெறும். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படும்.

ஜிஎஸ்டி குறித்து எந்த நடைமுறைகளும் நிலுவையில் இல்லை. மத்திய அரசு ஜிஎஸ்டி குறித்த விளக்கங்களை நிறுவனங் களுக்கும் வர்த்தகர்களுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது. இனி இதை இன்னும் வேகப்படுத்திய வேண்டிய தேவை உள்ளது. முக்கியமாக நுகர்வோர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த அறிவை புகட்ட வேண்டும். ஜிஎஸ்டி நடைமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சராசரியான வரி விகிதங்களால் பொருட்கள் விலை உயரவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சில வர்த்தகர் கள், ஜிஎஸ்டி விகிதத்தால் பொருட் களின் விலை உயர்ந்துவிட்டது என்று கூறி அதிக விலைக்கு விற்பார்கள். ஆகவே நுகர்வோர்களுக்கு ஜிஎஸ்டி நடைமுறைகள், வரி விகிதங்கள் குறித்த விவரங்களை வழங்க வேண்டும்.

அதீத லாபமீட்டுவதற்கு எதிரான அமைப்பை விரைவில் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 3 மாதங்களுக்கு பிறகு இந்த அமைப்பை ஏற்படுத்தினால் கூட பிரச்சினையில்லை. ஏனெனில் அதீத லாபமீட்டுவதாக தெரியவந்து புகார் செய்யப்பட்டால் அவர்கள் மீது அமைப்பு சார்பில் பிறகு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜிஎஸ்டியை சரியான முறையில் அமல்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஹஷ்முக் ஆதியா கூறினார்.

முன்னதாக கடந்த வாரம், 500 சேவைகள் மற்றும் 1,200 பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் இறுதி செய்யப்பட்டது. 5%, 12%, 18%, 28% ஆகிய பிரிவுகளில் ஜிஎஸ்டி விகிதம் இறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in