ரூ.25,000 கோடி கடனை அடைக்க ஆர்காம் திட்டம்

ரூ.25,000 கோடி கடனை அடைக்க ஆர்காம் திட்டம்
Updated on
1 min read

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.25,000 கோடி கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் அடைக்க உள்ளதாக வங்கிகளுக்கு கூறியுள் ளது. இரண்டு முக்கிய ஒப் பந்தங்கள் மேற்கொள்வதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது தொலைதொடர்பு கோபுரங்களை விற்க உள்ளது. மேலும் வயர்லெஸ் பிசினஸை ஏர்செல் நிறுவனத்துடன் இணைப் பதற்காக நடவடிக்கைகளிலும் உள்ளது. இந்த இரண்டு ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ரூ.25,000 கோடி கடனை அடைக்க திட்டமிட்டுள்ளதாக கடன் அளித்த வங்கிகளுக்கு முறையாக அறிவித் துள்ளது. 2017ம் ஆண்டின் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த கடனை அடைக்க நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட் டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

மார்ச் 31ம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.44,345.30 கோடியாக உள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக 10 வங்கிகளுக்கு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

தற்போது திருப்பி அளிக்க திட்டமிட்டுள்ள ரூ.25,000 கோடி யில், இதுவரை அளிக்க வேண்டிய கடன்களை மட்டுமல்லாமல், செலுத்த வேண்டிய கடன்களையும் குறிப்பிட்ட அளவில் முன்கூட்டி செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது; இந்த கடனை இரண்டு தவணைகளாக திருப்பி அளிப்பது குறித்து வங்கிகளிடத்தில் பேசி வருகிறோம். செப்டம்பர் 30ம் தேதிக்குள் அளிக்க உள்ளோம் என்றார். இந்த நடவடிக்கைகள் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சிறந்த பலன்களை உருவாக்கும் என்றும் கூறினார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டணப் போட்டி காரணமாக ஆர் காம் நிறுவனம் கடந்த ஆண்டின் நான்காவது காலாண் டின் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.948 கோடி நஷ்டமடைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.79 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் 2.44 சதவீதம் சரிவைக் கண்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in