

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிவடைந்து 60,773 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45 புள்ளிகள் சரிவடைந்து 17,809 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார முதல்நாள் வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.29 புள்ளிகள் சரிவடைந்து 60,640.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி74.85 புள்ளிகள் சரிவடைந்து 17,779.20 .80 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல், அமெரிக்காவின் மேக்ரோ பொருளாதார அறிக்கை வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவில் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, பங்குகள் உயர்வில் இருந்தன. டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.