Last Updated : 08 May, 2017 09:45 AM

 

Published : 08 May 2017 09:45 AM
Last Updated : 08 May 2017 09:45 AM

பெரும்பாலான நிறுவனங்கள் மகப்பேறு பலன் சட்ட விதிகளை அமல்படுத்துவதில்லை: சிஐஐ தலைவர் ஷோபனா குற்றச்சாட்டு

புதிய மகப்பேறு பலன் சட்டத்தின் விதிமுறைகளை நிறுவனங்கள் அமல்படுத்துவதில்லை என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஆண்களுக்கு நிகராக பெண் களுக்கு ஊதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகளை கொண்டு வர வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மகப்பேறு பலன் சட்டத்தில் 26 வார காலம் சம்பளத் துடன் (முன்பு 12 வாரமாக விடுமுறை இருந்தது) விடுப்பு வழங்க வழி வகை செய்துள்ளது. மேலும் தாய்மார்களுக்கும் நிறு வனத்தில் வசதிகள் செய்துதர வேண்டும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இது நிறுவனங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது ஒரு சட்டம் என்பதால் இதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மேலும் நிறு வனங்கள் பெண்களை வீட்டி லிருந்து வேலை செய்வதற்கான வழிமுறைகளை கொண்டு வர வேண்டும். சில நிறுவனங்கள் புதிய மகப்பேறு பலன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இல்லை. இதை அரசு கண்டறிந்து நிறு வனங்கள் சட்டத்தை அமல் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிஐஐ 1895-ம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது. எங்களது உறுப் பினர்களிடம் எதையும் வலியுறுத்து வது இல்லை. ஆனால் நாங் கள் எல்லாவற்றையும் அமல் படுத்தி வருகிறோம். அமல்படுத்து வதற்கு ஊக்கப்படுத்தியும் வரு கிறோம். பெண்களுக்கு மகப் பேறு பலன்களை வழங்குவதில் இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாடுகள் இதை விட அதிக பலன்களை பெண்களுக்கு வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x