அந்நிய செலாவணி கையிருப்பு 44 கோடி டாலர் சரிவு

அந்நிய செலாவணி கையிருப்பு 44 கோடி டாலர் சரிவு
Updated on
1 min read

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிவடைந்துள்ளது. மே 12-ம் தேதி நிலவரப்படி 44 கோடி டாலர் சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை ஒவ்வொரு வாரமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி மார்ச் 5 ம் தேதி முடிவடைந்த வாரத்தில் 37,571 கோடி டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 37,527 டாலராக சரிந்துள்ளது என கூறியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான முக்கிய அந்நிய நாணயங்களின் மதிப்பு 20 முதல் 30 சதவீதம் அதிகரித் துள்ளன. அந்நிய நாணய மதிப் பானது அமெரிக்க கரூவூல பத் திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், இதர குறிப்பிட்ட நாடுகள் வெளியிடும் பத்திரங் கள், வெளிநாட்டு மத்திய வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும்.

நாட்டின் தங்க கையிருப்பு மதிப்பு 2,043 கோடி டாலராக உள்ளது. எனினும் எஸ்டிஆர் மதிப்பு 55 லட்சம் கோடி சரிந்து 145 கோடி டாலராக உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) நாட்டின் கையிருப்பு 87 லட்சம் டாலர் சரிந்து 228 கோடி டாலராக உள்ளது.

அந்நிய நாணய மதிப்பை (FCA) அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பிடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in