

ஹைதராபாத், லக்னோ ஆகிய இடங்களில் மொத்த விலை(ஆன்லைன்) கடையை திறந்தது வால்மார்ட் இந்தியா நிறுவனம். மொத்த விலை கடையில் இருக்கும் பொருட்கள் இங்கும் இருக்கும். உறுப்பினர்களுக்கு சில சிறப்பு பொருட்களும் கிடைக்கும் என்று வால்மார்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த இணையதளத்தை ஆரம்பிக்கும் முன்பு இந்த இரண்டு நிறுவனங்களிலும் இருக்கும் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் வெப்சைட்டை பயன்படுத்துவது, சலுகைகளை தெரிந்துகொள்வது, பதிவு செய்யும் முறை போன்றவை உறுப்பினர்களுக்கு சொல்லித் தரப்பட்டன.