

ஜவுளித் துறையில் முக்கிய நிறுவன மான ரேமண்ட், காதி துணிகள் விற்பனையில் இறங்குகிறது. இதற் காக காதி கிராம தொழில் ஆணை யத்துடன் (KVIC) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து உலகம் முழு வதும் காதி ஆடைகளை கொண்டு செல்லும் நோக்கில் காதி லேபிளுடன் தங்களது ஆடைகளை அறிமுகம் செய்ய உள்ளது.
தனியார் நிறுவனத்துடனான கூட்டுத் தொழில் (PPP) அடிப் படையில் கேவிஐசி இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் காதி மற்றும் கிராம தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் காதி பொருட்கள், மற்றும் கைவினை பொருட்கள் விற் பனை, மேம்பாடு மற்றும் சந்தைப் படுத்தும் தொடர்புகளை உருவாக்க முடியும் என கேவிஐசி வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.
காதி நிறுவனத்துடனான ஒப்பந் தத்தின் மூலம், ரேமண்ட் நிறுவனம் தங்களது பிரதான கொள்முதலான மஸ்லின் காட்டன், கம்பளி, பட்டு துணிகளுடன் குறைந்தபட்சம் காதி மற்றும் காதி துணிகளையும் ஐந்து ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும்.
காதி முத்திரையுடனான புதிய ஆடைகள் இந்தியா முழுவதும் உள்ள எங்களது ரேமண்ட் விற் பனையகங்களில் கிடைக்கும். தவிர கேவிஐசி விற்பனை மையங்களி லும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிடைக்கும் என ரேமண்ட் தெரிவித்துள்ளது.
தரமான ரேமண்ட் காதியில் சமகால தேவைக்கு ஏற்ப ஆடைகள் வடிவமைக்கப்படும். இதன் மூலம் காதி துணிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க உள்ளோம் என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கெளதம் ஹரி கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள காதி ரகங்களை கொள்முதல் செய்து இறுதிகட்ட வேலைகளுக்கு தங்களது ஆலை களுக்கு ரேமண்ட் அனுப்பும். அது போல ரேமண்ட் நிறுவனத்தின் வல்லுநர்கள் காதி தயாரிப்பாளர் களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை களையும் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.