பங்குச்சந்தை | சென்செக்ஸ் 43 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 43 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவடைந்து 59,215 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து 17,445 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்த நேரத்தின் போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 10:13 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 43.55 புள்ளிகள் உயர்வடைந்து 59,751.63ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54.60 புள்ளிகள் சரிவடைந்து 17561.70 ஆக இருந்தது.

இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கி ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. மத்திய பட்ஜெட்டின் சாதமான அம்சங்கள் நேர்மறை சூழலைக் காட்டிய போதிலும், அதானி குழும பங்களின் கடும் வீழ்ச்சி பங்குச்சந்தைகளை கீழ்நோக்கி இழுத்தன. முதலீட்டாளர்களின் நலன்கருதி அதானி குழுமம் அறிவித்திருந்த பொது பங்களிப்பு நிதி (FPO)நிறுத்தி வைத்துள்ளது. இதனால் வர்த்தகம் நிலையில்லாமல் விற்பனையானது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், எம் அண்ட் எம், ஹெச்சிஎல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ் எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. மறுபுறம், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பேங்க், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா. ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃபிசி, பேங்க், ஹெச்டிஎஃபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in