ஏற்றத்தில் சென்செக்ஸ்.. இறக்கத்தில் நிஃப்டி..

பட்ஜெட் அறிவிப்பால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை கவனிக்கும் பங்கு தரகர்கள். இடம் கொல்கத்தா.
பட்ஜெட் அறிவிப்பால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை கவனிக்கும் பங்கு தரகர்கள். இடம் கொல்கத்தா.
Updated on
1 min read

மும்பை: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் மும்பைப் பங்குச் சந்தை ஏற்றத்திலும், தேசிப் பங்குச் சந்தை இறக்கத்திலும் நிலைபெற்றது. மிக அரிதாகவே இப்படி நிகழும். மும்பை பங்குச் சந்தையில்ஏற்றம் காணப்பட்டால், தேசியப் பங்கு சந்தையிலும் ஏற்றம் காணப்படும். இறக்கம் காணப்பட்டாலும் அப்படியே. ஆனால், நேற்றைய தினம் மும்பைப் பங்குச் சந்தை ஏற்றத்திலும் தேசியப் பங்குச் சந்தை இறக்கத்திலும் காணப்பட்டது.

மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 158.18 புள்ளிகள்உயர்ந்து 59,708.08-ஆக நிலைபெற்றது. இது 0.27% ஏற்றம் ஆகும். தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீடு 45.58 புள்ளிகள் சரிந்து 17,616.30-ஆக நிலைபெற்றது. இது 0.26% சரிவு ஆகும்.

அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழுமநிறுவனங்களின் பங்கு மதிப்பு மிகக் கடுமையாக சரிந்தது. அதானிகுழுமத்தில் முதலீடு செய்ததால் எல்ஐசி மற்றும் எஸ்பிஐயின் பங்குகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நேற்றைய தினத்தில் தேசியப் பங்குச் சந்தையில் அதானிஎண்டர்பிரைசஸ் 28.2%, அதானி போர்ட்ஸ் 19.18% என்ற அளவில் சரிந்தது. இதன் காரணமாகவே, நேற்றைய தினம் மும்பைச் பங்குச் சந்தை உயர்ந்த நிலையில் தேசியப் பங்குச் சந்தை சரிந்து காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in