

2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பொருளாதாரத்தில் பன்முக விளைவுகளை உருவாக்கும். மூலதனச் செலவுகளை அதிகரிப்பதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மிக கவனமாக இந்த பட்ஜெட் சமச்சீரான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெகுஜன மக்கள் பலனடையும் வகையில் பல முக்கிய அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூலதன முதலீடுகளுக்கான ஒதுக்கீடு அடுத்த நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது.
மத்திய அரசின் மூலதனசெலவினங்கள் ரூ.13.7 லட்சம்கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது பொருளாதாரத்தில் பல நன்மைகளை உருவாக்கும். குறிப்பாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் தனியார் துறை முதலீடுகளை எளிதாக ஊக்குவிக்கும் என்று சஞ்சீவ் பஜாஜ் தெரிவித்தார்.