

முருகப்பா குழுமத்தை சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து ரூ.6.16 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5.60 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் ரூ.22.51 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.17.73 கோடியாக நிகர லாபம் இருந்தது.
மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.58.15 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.48.03 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.214.55 கோடியாகும். கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.191.34 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.0.75 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. நேற்றைய முடிவில் 3.74 சதவீதம் உயர்ந்து 129.05 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.