

ஆட்டோ உதிரிபாகங்கள் தயா ரிப்பு நிறுவனமான போஷ் நிறு வனத்தின் பெங்களூரு ஆலை இன்று முதல் மீண்டும் செயல் பாட்டை தொடங்குகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினை காரண மாக கர்நாடகத்தின் பெலந்தூர் ஏரி பகுதியில் இருக்கும் அனைத்து நிறுவனங்களையும் மூடுமாறு கடந்த மே 5-ம் தேதி அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன் காரணமாக பெங்களூரு ஆலையை தற்காலிகமாக மூடப் படுகிறது என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த ஆலையை தொடர்ந்து நடத்து வதற்கான அனைத்து வாய்ப்பு களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. என்றும் தெரிவித்திருந்தது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது அறிவிப்பு எங்களது நிறு வனத்தின் வசதிகளுக்கு பொருந் தாது என்று கர்நாடக மாசு கட்டுப் பாட்டு வாரியத்திடம் போஷ் நிறுவனத்தினர் முறையிட்டனர். மேலும் இதுதொடர்பான விளக்கத் தையும் போஷ் நிறுவனத்தினர் கர்நாடக மாசு கட்டுப்பாடு வாரி யத்திடம் அளித்துள்ளனர். இதை ஆராய்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக ஆலையை மூடும் உத்தரவு போஷ் நிறுவனத் திற்கு பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
``வழக்கம் போல ஆலையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கும். தற்காலிகமாக மூடப் பட்டதால் ஏற்பட்ட இழப்பு குறித்து நிறுவனம் ஊகிக்கவில்லை என்று போஷ் நிறுவனம் தெரிவித் திருக்கிறது.