உலக பணக்காரர்கள் பட்டியல் - அதானியை பின்னுக்குத் தள்ளிய அம்பானி

முகேஷ் அம்பானி | கோப்புப் படம்
முகேஷ் அம்பானி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானியை பின்னுக்குத் தள்ளிய அம்பானி, இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்டின் தொடக்கத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 133 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்தில் இருந்தவர் அதானி குழும தலைவர் கவுதம் அதானி. எனினும், அதானி நிறுவனம் பல பத்தாண்டுகளாக தொடர் முறைகேடுகளை செய்து அதன் பங்குகளின் மதிப்பை உயர்த்தி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டதை அடுத்து, அதானி நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக, இன்றைய சந்தை நிலவரப்படி படி அதானி குழுமம் 75.1 பில்லியன் டாலர் மதிப்பை கொண்டிருக்கிறது. அதானி குழுமத்தின் மதிப்பு குறைந்ததை அடுத்து, 83.9 பில்லியன் டாலரை கொண்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார். 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி படிப்படியாகக் குறைந்து இன்று 15வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முகேஷ் அம்பானி 9-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் 3-வது மிகப் பெரிய பணக்காரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் உள்ளார். இவரது நிறுவனம் 26.1 பில்லியன் டாலர் மதிப்பை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் இவர் 58-வது பணக்காரராக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in