சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 158 புள்ளிகள் (0.3 சதவீதம்) உயர்வடைந்து 59,708 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.26 சதவீதம் ) சரிவடைந்து 17,616 ஆக இருந்தது.

மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:29 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 406.14 புள்ளிகள் உயர்வடைந்து 59,956.04ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 103.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,765.65 ஆக இருந்தது

மத்திய பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, 2024 நிதிநிலை ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளுடன் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருந்தனர். இதனால் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடனே இன்று பயணித்து. பட்ஜெட் தாக்கலின் போது ஜனரஞ்சக அறிவிப்புகள் வெளியான நிலையில் சென்செக்ஸ் 1,223 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 733 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. காப்பீட்டு பங்குளும், அதானி குழும பங்குகளும் இன்றை வீழ்ச்சியில் முக்கிய பங்குவகித்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 158.18 புள்ளிகள் உயர்வடைந்து 59,708.08 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.85 புள்ளிகள் சரிவடைந்து 17,616.30ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், ஹெச்டிஎஃபிசி பேங்க், ஹெச்டிஎஃபிசி, இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், விப்ரோ, எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபைன்ஸ், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டல்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in