மத்திய பட்ஜெட் 2023 தாக்கம்: விலை உயரும், குறையும் பொருட்கள் என்னென்ன?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி நகைகளுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால். அவற்றின் விலை உயர்கிறது.

வரும் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எந்தெந்த பொருட்களுக்கான விலை உயரும், எவற்றின் விலை குறையும் என்பது குறித்து பார்ப்போம்.

விலை உயரும் பொருட்கள்:

  • தங்கம், வெள்ளி நகைகள்
  • கவரிங் நகைகள்
  • சிகரெட்
  • இறக்குமதி செய்யப்பட்ட கார்
  • இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்
  • மின்சார சமையலறை புகைபோக்கி
  • இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
  • பொம்மைகள்

விலை குறையும் பொருட்கள்:

  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
  • லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in