

புதுடெல்லி: இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 7 இன்ஜின்களை செலுத்தி உறுதி செய்யவிருக்கிறோம் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
வேளாண் துறை: வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையத்திற்கு மத்திய அரசின் உதவி அளிக்கப்படும்
* நலிந்துபோன சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.