Published : 03 May 2017 10:30 AM
Last Updated : 03 May 2017 10:30 AM

வீட்டைப் புதுப்பிக்க, பழுதுபார்க்க இந்தியன் வங்கி புதிய கடன் திட்டம் அறிமுகம்

வீட்டைப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிக்காக வீட்டை அடமானம் வைக்காமல் கடன் வழங்கும் புதிய திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியன் வங்கி ‘ஐபி ஹோம் என்ரிச்’ என்ற புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, பழைய வீட்டை புதுப்பிக் கவும், பழுதுபார்க்கவும் இந்தக் கடன் வழங்கப்படும். ஒருவர் வாங் கும் மாத சம்பளத்தின் 36 மடங்கு அல்லது ரூ.10 லட்சம் வரை கடன் தொகை வழங்கப் படும்.

இதற்காக வீட்டை அடமானம் வைக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக எல்ஐசி, என்எஸ்சி பாண்டுகள் மற்றும் டேர்ம் டெபாசிட் ஆகியவற்றை அடமானமாக பெற்று இக்கடன் வழங்கப்படும். இந்தக் கடன் தொகைக்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானவரிச் சலுகை பெறலாம். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இப்புதிய கடன் திட்டத்தை இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான கிஷோர் கரத் தொடங்கி வைத்தார். வங்கியின் செயல் இயக்குனர்கள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சார்யா மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x