

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி விகிதம் வரும் நிதி ஆண்டில் 6 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 7 சதவீதமாக நிலவும் சூழலில், அடுத்துவரும் நிதி ஆண்டில் இதைவிட குறைவான வளர்ச்சியே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் இதுவே குறைவான வளர்ச்சி என்பதும் கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்படி, பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
பணவீக்கம்: 3 முதல் 4 தசாப்தங்களுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு உலக நாடுகளே அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டன. இந்தியாவில் விலைவாசி அதிகரித்தது.
நல்ல நிலையில் வளர்ச்சி வேகம்: இந்திய பொருளாதாரம் விரிவான அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுள்ளது. இது பொருளாதாரத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2014-2022 காலத்தில் ஒட்டுமொத்த திறன் விரிவாக்கப்பட்டுள்ளது.
வருவாய் அதிகரிப்பு: 2023 நிதியாண்டில் மத்திய அரசின் பொருளாதார திட்டங்களின் வெற்றிக்கு பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் நேரடி வரிவிதிப்பிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை முக்கியப் பங்காற்றின.
நிதி மேலாண்மை, நிதிப் பகிர்வு: 2022 ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதி கடுமைப்படுத்துதல் சுற்றை முன்னெடுத்தது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதத்தை 225 புள்ளிகள் அதிகரித்ததன் மூலம் நிதி கையிருப்பில் நவீனத்துவத்திற்கு வழிகோலியது.
சமூக உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு:
பருவநிலை மாற்றம்: 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான உறுதி மொழியை இந்தியா பிரகடனப்படுத்தியுள்ளது.
வேளாண் மற்றும் உணவு மேலாண்மை: வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் மிகச்சிறப்பாக உள்ளது. பயிர் மற்றும் கால்நடை வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு எடுத்து நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மேம்படுத்த உத்வேகம் அளிக்கப்படுகிறது. விவசாய உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது.
தொழில் துறை: தொழில் துறையின் மூலம் 2022 -23ம் நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதல் விகிதம் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சியான 2.8 சதவீதத்தை விட, இது அதிகமாகும்.
சேவைகள்: கடந்த நிதியாண்டில் 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்த சேவைத்துறை, இந்த நிதியாண்டில் 9.1 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதிப் பிரிவு: ஏப்ரல்-டிசம்பர் 2022-ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்க டாலர் மதிப்பில் 332.8 பில்லியன் ஆக இருந்தது.
அரசு-தனியார் கூட்டாண்மை: சாத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ், 2014-15 முதல் 2022-23 வரை, மொத்த திட்டச் செலவு ₹57,870.1 கோடியுடன் 56 திட்டங்களுக்கு முதன்மை ஒப்புதல் வழங்கப்பட்டது. நிதியாண்டு 23-25 முதல் ₹150 கோடி செலவில் இந்திய உள்கட்டமைப்புத் திட்ட மேம்பாட்டு நிதித் திட்டம் 03 நவம்பர் 2022 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
தேசிய உள்கட்டமைப்புத் திட்டம்:
தேசிய பணமாக்கத் திட்டம்:
விரைவு சக்தி:
எரிசக்தித் துறை மற்றும் புதுப்பிக்கத்த எரிசக்தித் துறை:
ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம்:
டிஜிட்டல் பொது பொருட்கள்: 2009 இல் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்த செலவில் சேவைகளை அணுகிப் பெறும் நிலை அடைந்துள்ளது