

ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2,380 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் விற்பனை 6.15 சதவீதம் உயர்ந்து ரூ.15,008 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,138 கோடியாக இருந்தது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.4.75 டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.