Xoom: இந்திய சந்தையில் ஹீரோ அறிமுகம் செய்துள்ள 110சிசி ஸ்கூட்டர் | விலை, சிறப்பம்சங்கள்

ஹீரோ Xoom ஸ்கூட்டர்
ஹீரோ Xoom ஸ்கூட்டர்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய வாகன சந்தையில் ‘Xoom’ எனும் புதிய 110சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக அறியப்படும் ஹீரோ நிறுவனம் மூன்று வேரியண்டுகளில் Xoom ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. LX - ஷீட் டிரம் ரூ.68,599, VX - காஸ்ட் டிரம் ரூ.71,799 மற்றும் ZX - காஸ்ட் டிரம் ரூ.76,699 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 என்ஜினை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. 110சிசி திறன் கொண்டுள்ளது. ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட ஸ்பீடோமீட்டர், எல்இடி முகப்பு மற்றும் டெயில் லேம்ப் போன்றவை இடம்பெற்றுள்ளன. மொத்தம் 5 வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் பார்க்கவே ஸ்போர்டி லுக்கில் உள்ளது. இந்த ஸ்கூட்டர் இளம் இந்திய தலைமுறையினரை கருத்தில் கொண்டு வடிவமக்கைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in