

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 562 புள்ளிகள் சரிவடைந்து 58,767 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 142 புள்ளிகள் உயர்வடைந்து 17,462 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின, என்றாலும் நிதி மற்றும் உலோக பங்குகளின் உயர்வு காரணமாக மீளத் தொடங்கின. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 43.20 புள்ளிகள் உயர்வடைந்து 59,374.10 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22.30 புள்ளிகள் உயர்வடைந்து 17,626.65 ஆக இருந்தது
வரவிருக்கும் இந்திய பட்ஜெட், அதானி குழுமங்கள் மீதான ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் கடந்த வாரம் கடும் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. இந்தச்சூழ்நிலையில் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தைத் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடனேயே தொங்கின. ஆனாலும் நிதி மற்றும் உலோக பங்குகளின் உயர்வு காரணமாக மீழத்தொடங்கின. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்து பின்னர் 250 புள்ளிகள் உயர்வடைந்தது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்என்ஐ, என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 2 முதல் 10 சதவீதம் வரை உயர்வடைந்து நிஃப்டி 50யில் லாபத்தில் முதலிடத்தில் இருந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, விப்ரோ, எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. டாடா மோட்டர்ஸ், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் சரிவில் இருந்தன.