

ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பண இருப்பு வங்கிகளை (கரன்ஸி செஸ்ட்) பாதுகாப்பை பலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. மேலும் ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல் வதற்கான பாதுகாப்பு அம்சங்களை யும் பலப்படுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் பண இருப்பு வங்கிகள் எண்ணிக்கை 4,000 ஆக உள்ளது. இந்த இடங்களில் பாது காப்பை பலப்படுத்தும் நடவடிக்கை களை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. சமீப காலமாக பண எடுத்துச் செல்லும் வேன்களிலும் வங்கிகளிலும் கொள்ளையடிப்பது நிகழ்ந்து வருகிறது. நாட்டின் பல் வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் கள்ளநோட்டுகள் வருவதாகவும் புகார்கள் வருகின் றன.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உயர் மட்ட குழுவை அமைத்தது. ரூபாய் நோட்டுகளை எடுத்து செல்லும் முறைகள், ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பண இருப்பு வைக்கும் வங்கிகள் ஆகியவற்றில் ஏற்கெனவே உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆராயும்படி இந்த உயர்மட்ட குழுவுக்கு உத்தரவிடப் பட்டது. மேலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த சர்வதேச வல்லுநர்களோடு இந்த குழு இணைந்து செயல்படும் வழிகளை ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது.
ரூபாய் நோட்டுகள் தற்போது 4 இடங்களில் அச்சடிக்கப்படுகிறது. நாணயங்கள் 19 இடங்களில் அச் சடிக்கப்படுகிறது. அச்சடிக்கப்பட்ட பிறகு இந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் 4,000 பண இருப்பு வைக்கும் வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன.