

வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடம் இருப்பதை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் வெங்கய்ய நாயுடு, ‘வருங்காலத் தில் கழிப்பறைக்கு இடம் ஒதுக்கப்படாத எந்த கட்டிடத்துக்கும் திட்ட அனுமதி வழங்கப்படாது. ஒவ்வொரு கட்டுமானத்துக்கும் கழிப்பிடம் கட்டாயமாக்கப்படும்.
அதேபோல், புதிதாக வாகனம் வாங்குவோர் அதனை நிறுத்திவைப் பதற்கு தங்களிடம் போதிய இடம் இருப்பதை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கியாக வேண்டும். உரிய சான்றிதழ் வழங்கினால் மட்டுமே வாகனப் பதிவுக்கு அனுமதி வழங்கப்படும்’ என்றார்.
இதுதொடர்பாக, சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவ தாகவும், அமைச்சர் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார். நகர்ப்புறங் களில் வாகன நெரிசலைக் கட்டுப் படுத்த இத்திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்கிறது.
முன்னதாக, ‘கூகுள் டாய்லட் லொகேட்டர்’ வசதியை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். டெல்லி, இந்தோர், போபால் ஆகிய பகுதிகளில் ஷாப்பிங் மால், மருத்துவமனை, பஸ், ரயில் நிலையங்கள், பெட் ரோல் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்கள் உட்பட 6,200-க்கும் மேற்பட்ட பொது கழிப்பிடங்களை கூகுள் சேவை மூலம் கண்டடைய முடியும் என, அமைச்சர் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார்.