Published : 04 Dec 2016 12:11 PM
Last Updated : 04 Dec 2016 12:11 PM

பொதுமக்களிடம் நிதி திரட்டி காணாமல் போன 78 நிறுவனங்கள்: முதலிடத்தில் குஜராத், மூன்றாமிடத்தில் தமிழகம்

பொதுமக்களிடம் நிதி திரட்டி காணாமல் போன நிறுவனங் களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 78 ஆக உயர்ந் துள்ளது. குஜராத் மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 நிறுவனங்கள் நிதி திரட்டி காணாமல் போயுள்ளன.

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் நிதி திரட்டிய இந் நிறுவனங்கள் அதன் பிறகு தங்களது நிதி நிலை அறிக்கை செபியிடம் தாக்கல் செய்ய வில்லை. இந்நிறுவனங்கள் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டிய தொகை ரூ. 312 கோடியாகும்.

மொத்தம் 238 நிறுவனங் களிடம் பொதுமக்கள் பாதிப் படைந்திருப்பதாக மக்களவையில் நிறுவன விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் மேகவால் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 160 நிறுவனங்கள் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்நிறுவனங்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளன. அதேசமயம் 78 நிறுவனங்கள் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

185 நிறுவனங்கள் குறித்து விசாரிக்குமாறு மோசடி விசாரணை அலுவலகத்துக்கு (எஸ்ஐஎப்ஓ) உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் உரிய கணக்கு களைத் தாக்கல் செய்யாத 24 நிறுவனங்களும் இப்பட்டியலில் அடங்கும்.

இந்நிறுவனங்கள் முறை கேடாக சீட்டு நடத்துவது, பொன்சி திட்டங்களை செயல்படுத்தியது, எம்எல்எம் எனப்படும் வர்த்தக மோசடிகளை செயல்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x