கிலோ ரூ.100-க்கு விற்ற சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால் ரூ.40-க்கு விற்பனை

கிலோ ரூ.100-க்கு விற்ற சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால் ரூ.40-க்கு விற்பனை
Updated on
1 min read

சேலம்: சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் விளைச்சல் பாதித்தது. இதனால் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது.

விலை உயர்வால் விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது பல இடங்களில் அதன் அறுவடை தொடங்கியுள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

தற்போது, மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட 40 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை குறைந்ததால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வரும் நாட்களில் விலை மேலும் குறையக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in