Published : 30 Dec 2016 10:29 AM
Last Updated : 30 Dec 2016 10:29 AM

தமிழகத்தில் வோடபோன் 4-ஜி அறிமுகம்

தமிழகத்தில் வோடபோன் 4-ஜி சேவை கோயம்புத்தூரில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 4 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடபோன் 4-ஜி சிம்மை அறிமுகம் செய்து பேசிய, அந்த நிறுவனத்தின் தமிழக தலைவர் (வணிகம்) எஸ்.முரளி, ‘ஏற்கெனவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 4-ஜி சேவையை வழங்கி வருகிறோம். தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருப்பூரில் தற்போது 4-ஜி சேவை அறிமுகம் செய்கிறோம். 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

தமிழகத்தில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடிக்குமேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 800-க்கும் மேற்பட்ட வோடபோன் அலுவலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு மேம் படுத்தப்பட்ட 4-ஜி சிம் இலவசமாக வழங்கப்படுவதுடன், 2 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.8-க்கு 30 எம்.பி. முதல் ரூ.999-க்கு 22 ஜி.பி. வரை பல்வேறு கட்டணங் களில் டேட்டாக்கள் வழங்கப்படும். மேலும், வோடபோன் பிளே மூலம் 3 மாதங்களுக்கு திரைப்படம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு சேவைகளும் வழங்கப்படும். இவற்றை அதிவேகமாக பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்ய முடியும்.

ஏற்கெனவே 20 நாடுகளில் வோடபோன் 4-ஜி சேவையில் செயல்பட்டு வருவதால், சந்தாதாரருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, புதிய மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தில் அதிவேக டேட்டா சேவை அளிக்கிறோம் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x