Published : 27 Jan 2023 11:31 PM
Last Updated : 27 Jan 2023 11:31 PM

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிக் பைக்குகள்: நிஞ்சா முதல் ஹயபுசா வரை

கோப்புப்படம்

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். அவரவர் வசிக்கும் இடத்தில் இருந்து அருகாமையில் உள்ள குறுகிய தொலைவு கொண்ட தூரம் என்றால் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகிறோம். இதில் சாகச பயண பிரியர்களுக்கு என சந்தையில் பிக் பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த வகையில் இந்திய வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் டாப் பிக் பைக்குகள் குறித்து பார்ப்போம். இதன் சிசி திறன், தோற்றம், செயல்பாடு போன்றவற்றினால் இந்த பைக்குகள் கவனம் பெறுகின்றன.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர்: கடந்த 2018-ல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ‘இன்டர்செப்டர் 650’ பைக்கை அறிமுகம் செய்தது. நாட்டின் முதல் அதிக சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் பைக் என இது அறியப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 3 லட்சத்திற்குள் உள்ளது. பைக் பிரியர்களின் ஆர்வத்தை அதிகம் ஈர்த்த பைக் இது. ராயல் என்ஃபீல்டின் மற்றொரு தயாரிப்பான கான்டினென்டல் ஜிடி பைக்கும் கவனம் ஈர்த்த பிக் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

கவாஸாகி நிஞ்சா 650: மிடில்-வெயிட் மோட்டார் சைக்கிள் வாங்க விரும்பும் பைக் பிரியர்களின் சாய்ஸ்களில் கவாஸாகி நிஞ்சா 650 பைக் மிகவும் பிரபலம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 7.12 லட்சம். 649 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது இந்த பைக். கவாஸாகி ZX10ஆர், கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் போன்ற பைக்குகளும் பைக் பிரியர்களை கவர்ந்துள்ளன.

ட்ரைம்ப் ட்ரைடண்ட் 660: கடந்த 2021-ல் ட்ரைம்ப் ட்ரைடண்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 660 சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ள பைக். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 7.45 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ட்ரைம்ப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 756 சிசி உடனும், ஸ்பீடு ட்வின் 900 சிசி மற்றும் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் உடனும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. ட்ரைம்பின் Bonneville பைக்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹோண்டா சிபி650ஆர்: இந்த பைக் நேக்கட் (Naked) 648 சிசி 4 சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது இந்த பைக். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 9.14 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதே அம்சங்களுடன் சிபிஆர்650ஆர் ரேஸிங் லுக்கில் கிடைக்கிறது.

கவாஸாகி Z900: இந்த பைக் இந்தியாவில் மிகவும் பிரபல சூப்பர் பைக்காக உள்ளது. கடந்த 2022-ல் மட்டும் சுமார் 562 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 948 சிசி உடன் 4 சிலிண்டர் எனஜினை இந்த பைக் கொண்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 9.02 லட்சம்.

சுசுகி ஹயபுசா: ஹயபுசாவின் தேர்ட் ஜெனரேஷனான இந்த பைக் 1,340 சிசி திறனை கொண்டுள்ளது. 4 சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ள இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 16.48 லட்சம்.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்: 999 சிசி உடன் 4 சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ளது இந்த பைக். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 20.25 லட்சம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x