Published : 27 Jan 2023 05:39 PM
Last Updated : 27 Jan 2023 05:39 PM

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 874 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் மூன்றாம் வார இறுதி நாள் வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 874 புள்ளிகள் (1.45 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,330 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 287 புள்ளிகள் (1.61 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,604 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 09:57 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 585.31புள்ளிகள் சரிந்து 59,619.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,762.10 ஆக இருந்தது.

பட்ஜெட்டுக்கு முந்தைய பதற்றம், வங்கி, நிதி மற்றும் எண்ணெய் பங்குகளின் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி போன்றவை இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிய வழிகுத்தன. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 1,230 புள்ளிகள் வரை சரிந்து 58,974 வரை இறங்கியது. இதனால் சென்செக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி கண்டது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 874.16 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,330.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 287.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,604.35 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், என்டிபிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ, டைடன் கம்பெனி, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x