ஹெச்1பி விசாவின் கீழ் ஊழியர்கள் பணிபுரிய அனுமதியில்லை: டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்

ஹெச்1பி விசாவின் கீழ் ஊழியர்கள் பணிபுரிய அனுமதியில்லை: டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்
Updated on
1 min read

அமெரிக்கர்களுக்கு பதிலாக வெளிநாட்டு ஊழியர்கள் பணி புரிவதை அனுமதிக்கமாட்டோம் என்று அமெரிக்க அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிஸ்னி வேர்ல்டு அல்லது மற்ற அமெரிக்க நிறுவனங்களில் ஹெச்1பி விசாவில் வந்து பணிபுரிவதற்கு வெளிநாட்டினரை அனுமதிக்க மாட்டோம். மேலும் ஒவ்வொரு கடைசி அமெரிக்கரின் வாழ்க்கை யைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் போராடுவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிஸ்னி வேர்ல்டு மற்றும் இரண்டு அவுட்சோர்சிங் நிறுவனங் கள் அமெரிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு ஹெச் 1 பி விசாவில் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தியது. 2015-ம் ஆண்டு கிட்டத்தட்ட 250 டிஸ்னி டெக்னாலஜி ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதை குறிப்பிட்டே ஹெச்1 பி விசாவுக்கு அனுமதியில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பணி யாளர்களும், ஹெச் 1பி விசா உரிமை பெற்று, அமெரிக்கா சென்று சில மாதங்களோ அல்லது ஆண்டுக்கணக்கிலோ பணிபுரிவது வழக்கம். இதன் காரணமாக, அமெரிக்க மக்களுக்குப் போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.

இத்தகைய சூழலில், அந்நாட் டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஹெச்1பி விசாவின் கீழ் வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என, திட்டவட்ட மாகக் கூறியுள்ளார்.

நான் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வேலையிலிருந்து நீக்கப்பட்ட பல அமெரிக்க ஊழியர்களை சந்தித்தேன். இவர்களை நீக்கி விட்டு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர். இனி இது போன்று நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மெக்சிகோவை ஒட்டிய அமெரிக்க எல்லைப் பகுதியில், அகதிகள் ஊடுருவல், போதை மருந்து கடத்தல் போன்றவற்றை தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பது உறுதி. இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in