புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமைகளுடன் சிஎம்ஏஐ தகவல் பகிர்வு ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமைகளுடன் சிஎம்ஏஐ தகவல் பகிர்வு ஒப்பந்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: கார்பன் சந்தையில் புதுமையான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் மாநிலங்களின் எரிசக்தி முகமைகளுடன் (ஏஆர்இஏஎஸ்) தகவல் பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கார்பன் மார்கெட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (சிஎம்ஏஐ) நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கார்பன் சந்தையில் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான முன்னேற்றங்கள், புதுமையான எரிசக்தி திட்டங்களை அமைப்பது மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பான தகவல்களைஅவ்வப்போது மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமைகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி பொருளாதாரம் மற்றும் கார்பன் சந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதை இலக்காகக் கொண்டு இந்த தகவல் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிஎம்ஏஐ தெரிவித்தது.

கார்பன் நடுநிலை: இதுகுறித்து சிஎம்ஏஐ தலைவர் மணீஷ் தப்காரா கூறுகையில், “கார்பன் நடுநிலை நோக்கிய பயணத்தை ஊக்குவிப்பதை எங்களது அமைப்பு இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in