Published : 17 Jan 2023 07:30 AM
Last Updated : 17 Jan 2023 07:30 AM

தமிழின் பெருமையை முன்னிறுத்தும் ஹுண்டாய்

சென்னை: பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் மொழி முக்கிய ஊடகமாகும். தண்ணீரின் சுவை ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுவதைப் போல இந்தியாவில் சில கி.மீ. தொலைவிலேயே பேச்சு மொழியில் மாற்றங்கள் இருப்பதைக் காணலாம்.

கார்களை சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இதைப் புரிந்துகொண்டு செயல்படுவது இன்றியமையாததாகும். நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹுண்டாய் இதைப் புரிந்துகொண்டு, அந்தந்த பகுதியின் சமூக கலாச்சாரத்துக்கு ஏற்ப பல சந்தைப்படுத்துதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இன்னோசியன் இந்தியா குழுவின் உதவி பொது மேலாளர் நீது கவுர் கூறும்போது, “இன்னோசியன் குழுவுக்காக சென்னையிலிருந்து சிறந்த படைப்பாற்றல் மிக்க பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் சிறந்த தொடர்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆயுத பூஜையின்போது தமிழ்நாட்டில் ஹுண்டாய் பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இம்மாநிலத்தின் புகழ்பெற்ற அம்சங்களுடன், தமிழில் முழுமையான பிரச்சாரம் வெளியிடப்பட்டது” என்றார்.

இன்னோசியன் தேசிய கிரியேட்டிவ் ஹெட் சிவேஷ்வர் ராஜ் சிங் கூறும்போது, “கலாச்சாரத்துடன் தொடர்புடைய திரைப்பட உருவங்கள், குறியீடுகளைப் பயன்படுத்தி தமிழக மக்களுக்கு ஒரு பெருமை உணர்வை ஏற்படுத்த முடிந்தது. இதன் மூலம் ஹுண்டாய் தமிழ்நாட்டை சொந்த தளமாகக் கொண்டுள்ளது என்பது நுட்பமாக விளக்கப்பட்டது. இந்த பிரச்சாரம் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு அவை தொலைக்காட்சி, அச்சு, சினிமா மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்பட்டன” என்றார்.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா குழுமத் தலைவர் விராத் குல்லார் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாக ஹுண்டாய் கார்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்கப்பட்டு, மேட்-இன்-இந்தியா கார்களுக்கான சிறந்த உற்பத்தி மையமாக இருந்து வருகிறது. இந்தியா ஒரு மாறுபட்ட சந்தையாக இருப்பதால் மிகவும் வலுவான பிராந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு ஹுண்டாயின் இரண்டாவது தாயகமாகும். இத்தகைய பிரச்சாரத்தின் மூலம் அனைத்து வயதினரையும் உறுதியுடன் இணைத்துள்ளோம்” என்றார். ஹுண்டாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x