

பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்திய தர நிர்ணய சான்று இல்லாத பாயிண்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு மத் திய அரசு அனுமதி அளித்துள்ளது
இந்திய தர நிர்ணய சான்று இல்லாத பாயிண்ட் ஆப் சேல் இயந் திரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிதியமைச்சகத்துக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரை செய்தது.
தற்போதைய சூழலில் தரச் சான்று மற்றும் தரச் சான்றுக்கான சின்னம் ஆகியவை பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களில் இருந்தால்தான் இந்திய சுங்கத் துறையினரின் அனுமதி கிடைக்கும்.
பணமில்லா டிஜிட்டல் பொரு ளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தரச் சான்று இல்லாத பாயிண்ட் ஆப் சேல் இயந்திங்களை இறக்குமதி செய்ய 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை சிறப்பு அனுமதி அளித்துள்ளதாக சுங்கத் துறையினருக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த கடிதத்தில் குறிப்பிட் டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையின் படி இந்தியாவில் மொத்தம் 15.1 லட்சம் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் உள்ளன. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகி வருவதால் 20 லட்சம் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.