சான் பிரான்சிஸ்கோ சாலை போல மும்பை - கோவா சாலையை அழகுபடுத்த திட்டம்: மத்திய அரசு பரிசீலனை

சான் பிரான்சிஸ்கோ சாலை போல மும்பை - கோவா சாலையை அழகுபடுத்த திட்டம்: மத்திய அரசு பரிசீலனை
Updated on
1 min read

மும்பையிலிருந்து கோவா வரை செல்லும் கடல் பகுதியை ஒட்டிய நெடுஞ்சாலையை அழகு படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் சான் பிரான் சிஸ்கோ நகரையும் லாஸ் ஏஞ் சலீஸ் நகரையும் இணைக்கும் சாலை எவ்விதம் அழகுபடுத்தப் பட்டுள்ளதோ அதைப் போல அழகுபடுத்துவது குறித்து பரிசீ லித்து வருவதாக மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு பசிபிக் கடல் பகுதி சாலை வழியாக செல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதைப் போல மும்பை கோவா சாலையை அழகுபடுத்தலாம் என்ற யோசனை தோன்றியதாகவும் அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக கடலோரப் பகுதி நகரங்கள் எவ்விதம் அழகு படுத்தப்படுகின்றன என்பதை அமெரிக்க நகரங்களைப் பார்த்த போது புரிந்தது என்று குறிப்பிட்ட கட்கரி, இப்பகுதி சாலைகளில் உள்ள மோட்டல்களை எவ்விதம் அழகுபட அமைக்கலாம் என்பதும் புரிந்தது. மத்திய அரசும் இதைப் போல சாலையோர பகுதிகளில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது என்றார்.

இதைச் செயல்படுத்துவது தொடர்பாக மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கார்ப்ப ரேஷனை (எம்எஸ்ஆர்டிசி) விரி வான அறிக்கை தயாரிக்கும்படி கேட்டுள்ளதாகவும் கட்கரி குறிப்பிட்டார்.

இதை செயல்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. சாலை வழி பயணத்தை இனி மக்கள் ரசித்தபடியே செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய சாலை மாநாட்டின் 77-வது ஆண்டுக்கூட்டத்தில் பேசுகையில் இக்கருத்தை கட்கரி தெரிவித்தார்.

விரைவான சாலை பயணத்துக்கு வசதியாக 22 ஆயிரம் ரயில்வே மேம்பாலங்களைக் கட்ட முடிவு செய்துள்ளதாக அவர் குறிப் பிட்டார். இது தவிர தேசிய நெடுஞ் சாலைகளில் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலைகளின் தரம் மேம்படுத் தப்படும் என்றார்.

சுற்றுச் சூழல், நில கையகப் படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைக ளால் 403 சாலை திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இதன் மதிப்பு ரூ. 3.75 லட்சம் கோடியாகும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சி னைகள் ஏற்படாத வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சாலையோரங்களில் ஹோட் டல்கள், மோட்டல்கள், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், ஹெலிபேட் வசதி அமைப்பதற்காக 1,300 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் பெருமளவு வேலை வாய்ப்பு உருவாகும். இது தொடர்பாக 70 டெண்டர்கள் ஏற் கெனவே கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொறியியல் பட்டதாரிகள், குறிப்பாக பாலிடெக்னிக்குகளில் டிப்ளமா படித்தவர்களைக்கொண்டு பாலங்களைப் பராமரிக்கும் பணிகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலித்து வருவதாக கட்கரி குறிப்பிட்டார். இதன்மூலம் இத்தகைய இளைஞர்களும் வேலை வாய்ப்பைப் பெறுவதோடு ஒப்பந்ததாரர்களாக உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in